இன்று தேசிய கைத்தறி தினம்!
இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இது கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது.
கைத்தறித் துறை என்பது நமது நாட்டின் வளமான பலவகை கலாச்சார பாரம்பரியங்களின் அடையாளமாகத் திகழ்கிறது.
நமது நாட்டின் ஊரகப்பகுதிகளிலும், சிறு நகரங்களிலும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக கைத்தறி உள்ளது.
இந்நாளில் கைத்தறி நெசவு செய்யும் சமூகத்தை போற்ற வேண்டும். மேலும், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறையின் பங்களிப்பை பாராட்ட வேண்டும்.
நெசவு தொழிலில் 70 சதவீதம் பேர் பெண்கள். இது கிராமம், சிறு நகரப் பகுதிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இயற்கையை மையமாக கொண்ட இத்துறை உற்பத்தி நடைமுறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.