பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்....சுயதொழிலில் கலக்கலாம்!
உத்யோகினி திட்டத்தில் மளிகை, பேக்கரி, ஊறுகாய் வணிகம் போன்ற 8 வகையான சிறு தொழில்களுக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது.
இந்த கடன்களைப் பெற 25 முதல் 62 வயதுடைய பெண்கள் விண்ணப்பிப்போருக்கு, ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கேட்டரிங் பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
முத்ரா யோஜனா திட்டம், பெண்களின் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனா சக்தி திட்டத்தின் கீழ் சில்லறை வர்த்தகம், குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. கடன் தொகையாக ரூ. 20 லட்சம்வரை வழங்கப்படும்.
யூகோ மகிளா பிரகதி தாரா திட்டத்தின் கீழ் உற்பத்தி திறனை மேம்படுத்த, செயல்பாட்டு மூலதனத்திற்காக 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்த்ரீ சக்தி திட்டத்தின் கீழ், ' பிசினஸில் பெரும்பான்மைப் பங்கை கொண்டிருக்கும் பெண்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.