ஹோலி பண்டிகை வாழ்த்துகள்!!

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நீண்ட குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் பூப்பதைக் குறிக்கிறது.

ஹோலி பண்டிகை இந்தியா மட்டுமின்றி வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் வண்ணங்களைத் தெளித்து கோலாகலமாகக் கொண்டாடுகிறது.

ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படி பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

இந்து நாட்காட்டியின் (பிப்ரவரி-மார்ச்) பால்குண மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை 15 நாள் உற்சவமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஹோலிக்கு முந்தைய நாள் ஹோலிகா தகன் கொண்டாடப்படுகிறது. இதை சோட்டி ஹோலி என்று சொல்லப்படுகிறது. இது தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

ஹோலியன்று மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைபூசி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்கள் மற்றும் தண்ணீர் துப்பாக்கிகளுடன் விளையாடுவது தற்போது பிரபலம்.

வசந்த காலத்தில் கிருமி பரவலால் காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை ஏறிந்து முன்பு விளையாடியதாக கூறப்படுகிறது.

குஜியா மற்றும் பாங் போன்ற சிறப்பு ஹோலி உணவுகளையும் மக்கள் ஒருவருக்கொருவர் அளித்து மகிழ்வர்.

ஆரம்பத்தில் வட மாநிலத்தவர்கள் மட்டும் கொண்டாடிய பண்டிகை, தற்போது இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.