மிக நீண்ட நேர சூரிய கிரகணம் இன்று: இந்தியாவில் தெரியாது
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று ( ஏப்., 8 ) ஏற்படுகிறது.
அமாவாசையான இன்று நடக்கும் இந்த சூரிய கிரகணம் மீன ராசியின் ரேவதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ, வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும்.
சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்தியாவில் பார்க்க முடியாது.
கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் நீண்ட சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகும்.
5 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடிக்கும்.