வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி? இதோ டிப்ஸ்

சுமார் நான்கு பேர் உள்ள குடும்பத்தில் ஒரு நாளில் கிட்டத்தட்ட 500 கிராம் வரை சமையறைக் கழிவுகள் கிடைக்கும்.

குறிப்பாக காய்கறி, கீரைகள் ஆகியவற்றின் தேவையில்லாத பாகங்கள் அதாவது சமைக்க பயன்படுத்தாத பாகங்கள் மற்றும் பழங்களின் தேவையில்லாத பாகங்கள் உரம் செய்ய உதவும்.

மேலும் வெங்காயத்தில் இருக்கக்கூடிய வெளித்தோல் பூண்டு தோல் மிகவும் சத்து மிகுந்தது. அவை மண்ணி்ன் சத்தை, வளத்தை அதிகரிக்க உதவும்.

வாழைப்பூ மடல்கள், கீரைகளின் தண்டுகள் போன்றவைகளும் பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, மாதுளம் தோல்கள், ஆரஞ்சு தோல் மற்றும் சக்கைகள் தேங்காயின் குடுமி, நார் போன்றவற்றை உரமாக்கலாம்.

வீட்டருகே 3 அடி ஆழத்தில் அகலமாக ஒரு குழியை தோண்டவும். அதில் சமையல் கழிவுகளையும் கொட்டலாம். மேலும் சமைச்ச கழிவுகளையும், அசைவ கழிவுகளையும் இதில் போடலாம்.

குழி 80% நிரம்பினதும், அதில் மண்ணைப் போட்டு மூடவும். மூணு மாதம் கழித்த பிறகு அதைத் திறந்து பார்த்தால் முழுக்க மட்கி உரமாகியிருக்கும்.

அதை எடுத்து அப்படியே பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை நீங்கள் வளர்க்கும் செடி கொடிகளில் ஒரு கை அளவு போடவும்.