இன்று 75வது குடியரசு தினம்: தெறிக்க விடும் 'தேஜஸ்'...
விமானப்படையில் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக 'தேஜஸ்' போர் விமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, இந்த போர் விமானத்தில் பறந்தார்.
இதை வாங்க பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.
இதன் நீளம் 43 அடி. உயரம் 14 அடி.இறக்கையின் நீளம் 27 அடி.
4000 கிலோ எடை ஆயுதங்களை சுமந்து செல்லும். மணிக்கு 2250 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ஒற்றை இன்ஜினுடன் கூடிய முழுவதும் ஆயுதம் ஏந்திய போர் விமானம். எடை குறைந்தது. நீண்ட ஆயுட்காலம் மிக்கது.
சூப்பர்சானிக் போர் விமான வகையை சேர்ந்தது. இதிலுள்ள ரேடார் 16 இலக்குகளை கண்காணிக்கும்.
ஏவுகணையை ஏந்திச்சென்று எதிரிகளை தாக்கும். நடுவானில் எரிபொருள் நிரப்பலாம்.