இன்று சர்வதேச சமூக நீதி தினம்!

சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூகநீதியாகும்.

அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், வாழும் மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதாகும்.

பிப். 20ல்அகில உலக சமூக நீதி தினமாக அங்கீகரிக்க வேண்டும் என ஐ.நா.வின் பொது சபையின் அமர்வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கிணங்க 2009ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக்கருத்தை முன்வைத்து சர்வதேச சமூக நீதி தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

'சேர்க்கையை மேம்படுத்துதல்: சமூக நீதிக்கான இடைவெளிகளைக் குறைத்தல்' என்பதுதான் இந்தாண்டு சமூகநீதி தினத்துக்கான மையக்கரு.

ஒவ்வொரு நாடும் தன் மக்களின் சம உரிமையை மதித்து, அவர்களுக்கு சம வாய்ப்பை அளித்தால் சமூகநீதி நிலைநாட்டப்படும்.

அடித்தட்டில் இருக்கிற மக்களை கைதுாக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில்லாமல் சம நீதி சாத்தியமில்லை.