புயல் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் டிப்ஸ் டிப்ஸ்...
புயல் நேரத்தில் மின்வெட்டு எப்போது வேண்டும் நிகழலாம் என யுபிஎஸ் பேட்டரியை முறையாக பராமரிக்க வேண்டும்.
வீட்டிற்குள் தண்ணீர் வரலாம் எனவே விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
புயல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
சூறைக்காற்றினால் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஏனவே அவற்றை மூடி வைக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்படலாம், அதனால் ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும்.
மீனவர்கள், படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.
நோய் தொற்று பரவும் என்பதால் காய்ச்சிய குடிநீரை பருகவும், சுகாதாரமான உணவை உண்ணவும்.