தமிழகத்தில் பட்ஜெட் செலவுக்குள் சில மலைவாசஸ்தலங்கள் !
தமிழகத்தில் மலைப்பிரதேசத்துக்கு சுற்றுலா செல்லலாம் என்றாலே 'டக்' கென்று பலருக்கும் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவை தான்.
ஆனால், இதையும் தாண்டி ஏராளமான மலைப்பிரதேசங்கள் ஆங்காங்கே உள்ளன. ஓரிரு நாள் பயணமாக பட்ஜெட் செலவுக்குள் சென்று வரக்கூடிய சில இடங்கள்...
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறுக்கு அருகிலுள்ள மலை சுற்றுலாத் தலம்தான் மாஞ்சோலை. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், முன் அனுமதி பெற வேண்டும்.
கொல்லிமலையில் 1,000 படிக்கட்டுகளை கடந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்றால், 180 அடி உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர் நம்மை அதிரடியாக வரவேற்கும்.
தேனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில், மேகங்கள் படைச்சூழ அழகுடன் அமைந்துள்ளது மேகமலை. நண்பர்களுடன் லாங் ரைடு செல்ல பைக் பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும்.
ஊட்டிக்கு அருகிலுள்ள கோத்தகிரி பழமையான மலை வாசஸ்தலமாகும். அழகிய தேயிலை தோட்டங்கள், மூடுபனி மூடிய தொட்டபெட்டா மலைத்தொடர், பள்ளத்தாக்குகள் என இயற்கைப் பிரியர்களை கவர்கிறது.