வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன... ரேம்ப் வாக் குறித்து ராஷ்மிகா

புஷ்பா படத்தில் வந்த சாமி.. சாமி... பாடல் மூலமாக தமிழகத்தின் பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர் கன்னட படங்களிலும் பிரபலம்.

டில்லியில் நடந்த எஃப்.டி.சி.ஐ., இந்திய கலாச்சார வாரம் 2022 பேஷன் விழாவில் பங்கேற்ற இவர், பிரபல பேஷன் டிசைனரான வருண் பால் வடிவமைத்த உடையை அணிந்து 'ஷோஸ் டாப்பர்' ஆக வலம் வந்தார்.

'புதிய இலைகள்' என்ற தீமில் சிவப்பு நிறத்தில் பூக்கள், இலைகள் என பசுமையை முன்னிலைப்படுத்தி, பாரம்பரியத்தை போற்றும் வகையில் இந்த லெஹங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

'டில்லியில் முதல்முறையாக.. அதுவும் பேஷன் வாரத்தில் டாப்பராக.. நடக்கும் போது மகிழ்ச்சியில் என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

சிவப்பு கம்பளத்தின் மீது ஸ்டைலாக நடக்க முயன்றால்.. பலன் தரவில்லை. புன்னகையுடன் கடந்து விட்டேன்' என்று ராஷ்மிகா இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு கூறியுள்ளார்.

பேஷன் விழாவில் ராஷ்மிகா ரேம்ப் வாக் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் லைக்குகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.