இளநரையை தவிர்க்க என்ன செய்யலாம்?
ஒரு சிலருக்கு டீனேஜ் பருவத்திலேயே கூந்தல் நரைக்கத் துவங்கும்.
பரம்பரையாகவோ அல்லது வைட்டமின்கள், ஜிங்க் சத்து குறைபாடுகளாலும், பித்தம் அதிகரிப்பதாலும் இளநரை வரலாம்.
இதற்கு தீர்வாக கறிவேப்பிலையை பொடி செய்து வெண்ணையில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.
உடலில் ஏற்படும் பித்த அதிகரிப்பை குறைக்க வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
மருதாணி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
வாரம் இரண்டு முறை கரிசலாங்கண்ணிக் கீரையை சமைத்து சாப்பிடலாம்.
நீலி பிருங்காதி தைலம், கரிசாலை தைலம் முதலிய தைலங்களை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தினமும் பயன்படுத்தலாம்.
சித்தா டாக்டர்களின் நேரடி ஆலோசனையின் படி காயகற்ப முறைகளை பயன்படுத்தி தீர்வு காணலாம்.