முதுமை என்பது முடங்கும் வயதல்ல

முதுமை வந்து விட்டதென முடங்கி விடக்கூடாது. ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன், வீட்டில் இருந்தே பெரிய முதலீடு இன்றி செய்ய பல தொழில் வாய்ப்புகள் உள்ளது

தொழில் என்பது பொருளாதாரத்திற்காக செய்வது, மன அமைதிக்காக செய்வது என இரண்டு பிரிவுகள் உள்ளன. நம் தேவைகளை பொறுத்து, உடல் நிலையை பொறுத்து தேர்வு செய்யலாம்.

உணவு சார்ந்த தொழில் வீட்டில் இருந்து, மசாலா பொடிகள் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கலாம், வடகம், தாளிப்பு வடகம், பொங்கல் மிக்ஸ், அடை மிக்ஸ், ஊறுகாய் என பலவற்றை தயாரிக்கலாம்.

வீட்டு சமையலறை பொருட்கள் போதும். ஆர்டர் தருபவர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தயாரிப்பை ஆரம்பத்தில் துவக்கலாம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு மட்டும் இருந்தால் போதும்.

டியூசன், கதை சொல்லி பெரிய வருமானம் கிடைக்காது. அதனால் மன நிறைவு, கொஞ்சம் வருமானம் போதும் என்பவர்கள் வீட்டில் அருகில் உள்ள குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கலாம்.

சோப்பு தயாரிப்பு, குளியல் பொடி, தலைமுடிக்கான எண்ணெய், சோப்பு போன்றவற்றை எளிதாக வீடுகளில் தயாரிக்க முடியும். தெரியாதவர்கள் பயிற்சி பெற்று பின்னர் துவக்கலாம்.

சேனல் துவங்கலாம் சொந்த அனுபவங்களை சமூகவலைத்தள உதவியுடன் சேனல் துவங்கி. சமையல் முதல் சகலமும் பதிவு செய்து புதிய அனுபவத்தையும், வருமானத்தையும் பெறலாம்.

நல்ல எழுத்து வளம் உள்ள முதியோர் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை இ-புக்ஸ் ஆக வடிவமைத்து, ஆன்லைன் வாயிலாக எளிதாக விற்பனை செய்து பணம் ஈட்டலாம்.

குழந்தைகளை பராமரிக்க உதவி செய்து, அதன் வாயிலாக சிறிய தொகையை சம்பாதிக்கலாம்.