இன்று உலக சுற்றுலா தினம்!!
ஆதிகால மனிதனின் பயணமே பரிணாம வளர்ச்சியானது. பயணமே புதிய கண்டுபிடிப்பானது. கொலம்பஸின் பயணம் புதிய இடங்களைக் கண்டறிந்தது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் தலங்களின் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சுற்றுலா செல்வது என்றாலே குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது.
இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார பெருமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது.
இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் செப். 27ல் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்புகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
சுற்றுலாவும் உலக அமைதியும் என்பது இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாகும்.
உலக சுற்றுலா தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு சுழற்சி முறையில் நடத்தும், அதன்படி, 2024ம்- ஆண்டு உலக சுற்றுலா தினத்தை ஜார்ஜியா நடத்துகிறது.