யாதும் ஊரே...உலகமெல்லாம் மகாசிவராத்திரி கொண்டாட்டம்...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில்களில் மகாசிவராத்திரி அன்று இரவும் பகலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
நேபாளத்திலும் மகாசிவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் அங்கு தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.
காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலில் அன்று சிறப்பு அலங்காரம், பூஜை என விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிரபலமான ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் கோயில் உண்டு. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை இந்துகள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற ரத்னேஷ்வர் மஹாதேவ் கோவிலுக்கு ஆனந்தமாக கூடுவார்கள்.
சிங்கப்பூரின் கிழக்கு கெய்லாங் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு சிவ பெருமான் திருக்கோயிலாகும். இங்கும் மகா சிவராத்திரி அன்று விசேஷமாக இருக்கும்.
மேலும் மலேசியா, அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற பல நாடுகளில் உள்ள இந்து கோவில்களிலும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக நடக்கிறது.