எவரெஸ்ட் போக ஆசையா? அப்போ இதை கொஞ்சம் கவனிங்க!
நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியும் என்றாலும், பெரும்பாலான ஏஜென்சிகள் நேபாளத்தில் தான் செயல்படுகின்றன.
மே மாதத்தில் வெப்பநிலை மற்றும் அதிக உயரத்தில் காற்று குறைவாக இருப்பதினால் இந்த நேரத்தில் மலையேற்றம் எளிதாக இருக்கும்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய 60 நாட்கள் வரை ஆகக்கூடும்.
ஏறுவதை விட கடினமானது அதற்கான நிதியை திரட்டுவதுதான் என்று ஏற்கனவே ஏறியவர்களின் அனுபவ வார்த்தையாகும். எனவே, அதிக பணமும், தீவிர உடற்தகுதியும் தேவைப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரம் ஏறுபவர்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டியுடன் இருக்க வேண்டும்; தனியாக ஏற அனுமதி இல்லை.
எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு முன் ஆர்வமுள்ள நபர்கள் ஏற்கனவே 7,000 மீ உயரத்தை எட்டியிருக்க வேண்டும்.
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பார்வையற்றவர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையேறுபவர்கள் மருத்துவ அறிக்கையை அளிக்க வேண்டும். உரிய சாகச காப்பீடும் பெற வேண்டும்.
உங்கள் மலையேற்றம் வெற்றிகரமாக இருக்க மலையேற்றத்தை மெதுவாக துவக்கி, படிப்படியாக வேகமெடுத்தால் எளிதில் சோர்வடைய மாட்டீர்கள். நீரேற்றமாக இருப்பதும், மிகவும் முக்கியமானது.
சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்; தூக்கமும் அவசியமானது என்பதால், மலையேற்றத்துக்கு முன்னர் போதுமான அளவு தூங்கினால், மட்டுமே புத்துணர்ச்சியுடன் வீறுநடை போட முடியும்.