சுற்றுலா செல்லும் போது தங்கும் இடம் தேர்வு மிகவும் முக்கியம்!
அறைகளை நேரில் சென்று முன்பதிவு செய்வதை விட, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்துவிட்டு கிளம்புவது நல்லது.
'ஆன்லைன்' பக்கத்தில் புகைப்படங்களை பார்ப்பதற்கும், நேரில் சென்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
எனவே, ஹோட்டல் அறை, முன்பதிவு செய்யும் முன், மற்றவர்கள் கொடுத்து இருக்கும், 'ரெவியூ'களை படித்து பாருங்கள். அல்லது அந்த ஊருக்கு சென்று வந்த நண்பர்களிடம் விசாரித்து, முன்பதிவு செய்யலாம்.
அறையின் முன்பதிவை ரத்து செய்யும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களைக் கேட்காமல், முடிவு எடுக்கும் உரிமை ஹோட்டல்களுக்கு இருக்கிறது.
இந்த தகவல் குறித்து குறிப்பிட்டு இருந்தால், அங்கு அறைகள் முன்பதிவு செய்வதை தவிர்க்கலாம்.
போகும் இடங்களுக்கு மையமாக இருக்கும் பகுதியில், தங்கும் இடத்தை தேர்வு செய்தால் ஆட்டோ, கார், பேருந்துக்கான தொகையை மிச்சப்படுத்தலாம்.
அறை முன்பதிவு செய்யும் முன், போக்குவரத்து மற்றும் உணவக வசதிகள் இருக்கிறதா எனவும், பார்க்க வேண்டும்.
ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்யும் முன், அங்கு குடும்பமாக தங்க இயலுமா என்பதையும், 'செக்' செய்து கொள்வது நல்லது.