போலி பல்கலைகள்... மாணவர்களே உஷார்
நாடு முழுவதும் பல்கலை மானியக்குழு அங்கீகாரமின்றி செயல்படும் போலி பல்கலை பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேசியளவில் 21 பல்கலைகள் போலி பல்கலையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், ஆந்திராவில் 2, டில்லியில் 8, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்தர பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2 உட்பட, 21 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் எந்த பல்கலையும் இப்பட்டியலில் இல்லை.
எனவே, பிற மாநிலங்களில் படிப்பிற்காக செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் விபரங்களை, https://www.ugc.gov.in/ எனும் யு.ஜி.சி., இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.