பத்து நாள் பேக்கப் வழங்கும் பக்காவான ஸ்மார்ட்வாட்ச்!

ஃபிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில், மகளிருக்கான தனது முதல் ஸ்மார்ட்வாட்சான ஃபிளேர் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக ஃபிட்ஷாட் நிறுவனத்தின் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, மகளிருக்கான தனது முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

1.43-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன் மற்றும் காஸ்மிக் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் சப்போர்ர்ட்டுடன் வெளிவந்துள்ளது.

இத்துடன் IP68 தர சான்று பெற்ற இந்த ஸ்மார்ட்வாட்சில் உள்ள, UV சென்சார் சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை கண்டறிந்து, பயனர்கள் தொப்பி, கண்ணாடி அணிய எச்சரிக்கும்.

இதில், பெண்களுக்கு தேவையான வெல்னஸ் டிராக்கர், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, SpO2, UV லைட், மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

முற்றிலும் பிரீமியம் பாகங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்சில், டேலைட் ஸ்கிரீன், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கால் ரிமைண்டர்கள், ஷெட்யுல் ரிமைண்டர்கள், ஆப் புஷ் ரிமைண்டர்கள், அலாரம் நோட்டிஃபிகேஷன், சமூகவலைதள அலெர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

பயனர்களுக்கு அழைப்பு அல்லது மெசெஜ் வரும் பட்சத்தில் இதில் உள்ள குயிக் மெசேஜஸ் அம்சம் மூலம் அதற்கு பதில் அளிக்க முடியும்.

பின்க், புளூ மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.