விடுமுறை விட்டாச்சு... அடுத்து, சுற்றுலா போக திட்டமிடுகிறீர்களா?
பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க, சரியான திட்டமிடல் அவசியம். பட்ஜெட் துவங்கி தங்கும் இடம், உணவு, போக்குவரத்து வசதிகள் என, அனைத்தையும் திட்டமிட வேண்டும்.
பயணத்திட்டமிடல் பட்ஜெட் நிர்வகிப்பது பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்...
இடத்தை முடிவு செய்து, அதற்கேற்ப பட்ஜெட்டை திட்டமிடுவதை விட, நம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பயண இடங்களைத் தேர்வு செய்வதே சரி.
பட்ஜெட்டுக்கு உகந்த இடங்களை முதலில், 'லிஸ்ட்' எடுத்து, பருவநிலை, சூழல் தெரிந்து, குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தோடு தேர்வு செய்யலாம்.
இடம், எத்தனை பேர் எவ்வளவு செலவாகும் என்பதையெல்லாம், மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிடுங்கள்.
கூட்டமாகச் செல்லும்போது பயணத்தில் சில சலுகைகளைப் பெற முடியும். அவை உங்கள் பணத்தை மிச்சம் செய்ய உதவும்