கருவளையங்கள் முதல் வறட்சி வரை...சரும பராமரிப்பில் நெய்யின் மேஜிக்!

நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இது சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சருமத்துக்கு நீண்ட நேரத்துக்கு நீரேற்றத்தை அளிக்கிறது.

உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகளால் அடிக்கடி பாதிக்கப்பட்டால், நெய் சிறந்த தீர்வாக இருக்கும். உதடுகளின் வறட்சியை நீக்க உதவும்.

கண்ணுக்குக் கீழேயுள்ள கருமையான திட்டுகள் பார்க்க விரும்பத்தகாததாக இருக்கும். ஆனால், கருவளையத்தை சுற்றி சிறிது நெய்யைத் தேய்ப்பது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.

சுருக்கங்கள் மற்றும் வயதான துவக்க நிலை அறிகுறிகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

செரிமானம் நன்றாக இருக்கும் போது, உடலிலுள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்படுவதால், சருமம் பளபளப்பாக இருக்கும்.