இன்று உலக மக்கள்தொகை தினம்!
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது.
1950ல் 253 கோடியாக இருந்த மக்கள் தொகை 2021ல் 790 கோடியானது.
தற்போது 800 கோடி. இது 2030ல் 850 கோடி, 2050ல் 970, 2050ல் 970 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2100ல் உலக மக்கள் தொகை 1090 கோடியாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் இந்தியாவின் மக்கள்தொகை தற்போது முதலிடத்தில் உள்ளது
இத்தினத்தில், மக்கள்தொகை கட்டுப்பாடு, பெண் கல்வி, பெண்களுக்கு சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.