மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து

சுற்றுச்சூழலில் மருந்து, நச்சுத்தன்மையின் தாக்கம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை வெளியானது.

அதில், வளர்ச்சி அதிகரிக்கும் போது, ரசாயன கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைகின்றன. 43 சதவீத ஆறுகள், மருந்து கழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்கின்றன.

தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளும் மனிதர்கள், விலங்குகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன; உயிரினங்கள் வெளியேற்றும் சிறுநீர், மலத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை விதிகளின்படி அகற்றுவதில்லை. மருத்துவ கழிவு நீரை சுத்திகரிக்காமல், பொது கழிவுநீர் கால்வாயில் விடுகின்றனர்.

சாதாரணமான குப்பையுடன் மருத்துவகழிவுகளை போட்டு விடுகின்றனர். இவை மண்ணில் புகுந்து மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும் அபாயகரமானதாக மாற்றுகின்றன.

ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதைப் பொருள் பயன்பாடுகளாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

ஹைட்ரஜன் குளோரைடு, பென்சீன் மற்றும் டோலுயீன், கல்நார், காட்மியம், பாதரசம், குரோமியம், கீமோதெரபி கழிவுகள் ஆபத்தானவை. மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மருந்துகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், பாதிப்புகளை குறைக்க, ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்

மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்து குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது.