ஈத் ஃபேஷன் 2023... பிரபலங்களின் ஸ்டைலிஷான சில உடைகளை பார்க்கலாம்.

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புத்தாடைகள் கொண்டாட்டத்தை இன்னும் கோலாகலமாக மாற்றுகின்றன.

ஷாப்பிங் மால்களுக்கு செல்வது மட்டுமின்றி ஆன்லைன் ஷாப்பிங்களும் களை கட்டுகின்றன.

உங்களின் சாய்ஸாக ஷராரா இருந்தால், காஜல் அகர்வாலை போன்று முயற்சிக்கலாம்.

பிரபல பேஷன் டிசைனர் அனாமிகா கன்னா வடிவமைத்த இந்த ஷராராவில் காஜல் அகர்வால் உற்சாக நடை போடுகிறார்.

ஆறு கஜம் புடவையில் அழகிய நடை போடலாம் என்பதற்கேற்ப அசத்தலாக உள்ளார் நடிகை கரிஷ்மா கபூர்.

பிரின்டட் கருப்பு மற்றும் பழுப்பு நிற புடவை, தோள்களுக்கு மேல் அழகிய நெட்டட் கோட் என நளினமாக உள்ளார்.

ஈத் பண்டிகையன்று பாரம்பரிய தோற்றத்துக்கு செல்ல விரும்பினால், நாகினி நடிகையான மவுனி ராயின் ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மென்மையான இளஞ்சிவப்பு நிற அனார்கலியில் அசத்துகிறார் மவுனி ராய்.

பிரபல பேஷன் டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை அணிந்து அசத்துகிறார் நைசா தேவ்கன்.