உணவுமேஜை நாகரிகம்; 'ஃபிங்கர் பவுல்' வழக்கொழிந்து போனது ஏன்?

அமெரிக்காவில் முதல் உலகப்போருக்குப் பின்னர் துவங்கிய ஃபிங்கர் பவுல் கலாசாரம், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் ஆட்கொண்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில், பிரட் சான்விட்ச், பர்கர், முழு இறைச்சி உள்ளிட்ட சில உணவுகளை கைகளில் எடுத்தே சாப்பிடவேண்டும்.

எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை சுத்தம் செய்ய மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபிங்கர் பவுலின் எலுமிச்சைத் தண்ணீரில் விரல்களை விடவேண்டும்.

பீங்கான கிண்ணத்தை பீங்கான் சாசரின்மீது வைத்து தண்ணீர் நிரப்பி, எலுமிச்சைத் துண்டை நறுக்கிப் போட்டால் ஃபிங்கர் பவுல் தயார்.

கைகளில் எண்ணெய்ப் பசை நீக்க, எலுமிச்சையை எடுத்து விரல்களில் தேய்த்துக்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை, விரலின் உணவு வாசத்தை நீக்கிவிடும்.

ஒரு டைனிங் மேஜையில், பேர் உணவருந்தினால் அனைவருக்கும் தனித்தனியாக ஃபிங்கர் பவுல், டவல் வைக்கப்பட்டு இருக்கும்.

இந்த முறை உலகின் அனைத்து முன்னணி ஸ்டார் ஹோட்டல்களிலும் உணவு மேஜையில் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக பணக்காரப் பெண்கள் ஃபிங்கர் பவுல் பயன்பாட்டை அதிகம் விரும்பினர்.

தற்போது ஸ்டார் ஹோட்டல்களில் வாஷ் பேசின்கள், ஹேண்ட் வாஷ், சானிடைசர், டிரையர் இயந்திரம், டிஷ்யூ பேப்பர் உள்ளிட்டவை வந்துவிட்டன.

இதனால் காலப்போக்கில் இந்த ஃபிங்கர் பவுல் டைனிங் கலாசாரம் வழக்கொழிந்துபோனது குறிப்பிடத்தக்கது.