இன்று இந்திய இளைஞர் எழுச்சி தினம்
'மக்கள் ஜனாதிபதி' அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், புதுமையைச் சிறப்பாகச் செய்ய முடியாது. எனவே பழமையை மறக்கக்கூடாது.
பணத்தை எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல, 'சிக்கனம்.' பணத்தை எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறோம் என்பதில்தான் சிக்கனம் இருக்கிறது.
நீ முன்னேறிக் கொண்டிருக்கும்போது, மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள். ஒரு வேளை நீ பின்னடைவை சந்திக்க நேர்ந்தால், யாராவது உனக்கு உதவுவார்கள்.
உலகம் ஒரு விசித்திரமான கல்விக்கூடம். இங்கே பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலி தான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான்.
நீங்கள் விரும்புவது ஒரு வேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.