உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு நாகமலை குன்று அறிவிப்பு

தமிழக அரசின் உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 நவம்பரில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காசம்பட்டி, எலத்துார் ஆகியவை இணைந்த நிலையில், 4வது உயிரியல் பாரம்பரிய தளமாக, ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பல்வேறு சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு, ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.

இங்குள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள், பாறை பகுதிகள் ஆகியவை, பல்லுயிர்களுக்கு வாழ்விடமாக உள்ளன.

கடந்த, 2024ன் கணக்கெடுப்பின்படி, இங்கு 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள், 7 பாலுாட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்தி இனங்கள், 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள முக்கிய உயிரினங்களில், பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனை பருந்து ஆகியவை அடங்கும்.

தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று, அதன் கலாசார பாரம்பரியத்தை காட்டுகிறது.

இரும்பு காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், பழங்கால கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள், வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன.