வர்கலா: கேரளாவில் ஒரு பாபநாசம்!
மழைக்காலத்திலும் தாராளமாக செல்லக்கூடிய டூரிஸ்ட் ஸ்பாட் தான் கேரளாவில் உள்ள வர்கலா.
நீண்டு இருக்கும் குன்று ஓரம் உள்ள அழகிய பீச், ஹிப்பி கலாசாரம். பழமையான கோயில்களும் நிறைந்த பகுதி
திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து 51 கி.மீ வடக்கேயும் தெற்கு கேரளத்தின் கொல்லத்திற்கு தெற்கே 37 கி.மீ-லும் அமைந்திருக்கிறது.
அரபிக்கடலை ஒட்டிய 15மீ உயரமுள்ள ஒரு சிறிய குன்று இருப்பது சிறப்பாகும். இங்கு உள்ள குன்றுகள் மூன்றாம் நிலை படிவப்பாறைகளால் உருவானவை.
ஆன்மிகத்தை பிரதானப்படுத்தும் 2000 வருடப் பழமையான விஷ்ணு கோயில், சிவகிரி மடம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தளங்களை உள்ளடக்கி உள்ளன.
வர்கலாவிலிருந்து பத்து கி.மீ., தூரத்தில் உள்ளது பாபநாசம் கடற்கரை. பாபநாசம் கடற்கரையில் குளிப்பது அனைத்துப் பாவங்களையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது;
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த இடத்துக்குச் செல்ல சிறந்த பருவமாகும்.
வர்கலா ஓய்வுக்காக வருபவர்களையும், இயற்கை விரும்பிகளையும், ஆன்மிக தேடல் உள்ளவர்களையும் ஒரு சேர ஈர்க்கிறது.