இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
'குழந்தை தொழிலாளர்' முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து 'நமது அர்ப்பணங்களில் செயல்படுவோம். குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொணர்வோம்' என்பதாகும்.
எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பாக அமைகிறதோ? அதுதான் ஒழிக்கப்பட வேண்டிய குழந்தை தொழிலாளர் முறை.
கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்வி தான் கற்க வேண்டும்.
விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் ஆகியவை தவறில்லை. இது அவர்களின் முன்னேற்றத்துக்கு தான் வழிவகுக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.
10 குழந்தைக்கு ஒரு குழந்தை குழந்தை தொழிலாளியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு போதிய உணவும் கிடைப்பதில்லை. இவர்கள் குழந்தைகளாகவே இருப்பதற்கு கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
2011 சென்சஸ் படி 5 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையில் 3.53 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர்.
வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றலாம்.