சுற்றுலா ஸ்பெஷல்: டார்ஜிலிங்கிற்கு டூர் போகலாமே!

மேற்கு வங்காளத்தில் உள்ள, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற, மலைவாசஸ்தலம், டார்ஜிலிங்.

இங்கு இயக்கப்படும், டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில்வே போக்குவரத்து, யுனெஸ்கோவால் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தியாவின் சிறு ரயில் போக்குவரத்தும் இது ஒன்று தான். இது, டார்ஜிலிங்கில் இருந்து, கும் என்ற இடத்திற்கு சென்று வருகிறது.

இதில் பயணிப்பதற்காகவே சுற்றுலாப் பயணியர் இங்கு படையெடுக்கின்றனர்.

புகழ்பெற்ற டீ கார்டன், டைகர் ஹில், பொட்டானிகல் கார்டன், எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் என, செப்டம்பர் - ஜூன் வரை சீசன்.

சென்னையில் இருந்து, ஜல்பாய்குரி அல்லது சிலிகுரிக்கு ரயிலில் சென்று, அதன் பின், டார்ஜிலிங்கிற்கு ஆட்டோ ரிக்ஷா அல்லது காரில் போய், குளிரை அனுபவிக்கலாம்.