2024 ஜனவரியில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 பிராண்டுகள்

ஜனவரி 2024 -ல் கிட்டத்தட்ட 1,66,802 யூனிட் விற்பனையுடன் மாருதி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஹூண்டாய் ஜனவரி மாதத்தில் டாப் கார்கள் பட்டியலில் 57,115 கார்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் மாதாந்திர விற்பனை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

டாடா மூன்றாவது இடத்திற்கு வீழ்ந்தாலும், விற்பனை புள்ளிவிவரங்கள் நேர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மொத்த விற்பனை 53,635 யூனிட்டுகளை எட்டியது.

ஜனவரி 2024 -ல் மஹிந்திரா விற்பனை 43,068 யூனிட்களை கடந்தது.

கியா ஜனவரி 2024 -ல் 23,769 யூனிட்டுகளுக்கு மேல் விற்றதால், மாதாந்திர விற்பனை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்தது.

டொயோட்டா 23,197 கார்களுடன், இந்த ஜன.,யில் ஆண்டு விற்பனையில் (82 %க்கும் மேல்) அதிகரித்துள்ளது; அதே நேரத்தில் அதன் மாதாந்திர விற்பனை 8.5 %வரை வளர்ந்தது.

ஹோண்டா 8,681 யூனிட்களை மேல் விற்படையான நிலையில், அதன் மாதாந்திர விற்பனை கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

3,826 கார்கள் விற்பனையான நிலையில், எந்த வகையிலும் சரிவைக் காணாத பட்டியலில் கடைசி பிராண்ட் ரெனால்ட் ஆகும். அதன் மாதாந்திர விற்பனை கிட்டத்தட்ட இருமடங்கானது.

எம்ஜி மாதாந்திர மற்றும் வருடாந்திர விற்பனையில் நஷ்டத்தை சந்தித்த ஒரே பிராண்ட் ஆகும். 3,825 கார்கள் விற்பனையாகியுள்ளன.

கடைசியாக, 3,267 கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் அதிக விற்பனையான பிராண்டுகளின் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.