இன்று சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதுகாப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவ., 6ல் போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாடுகளிடையே அல்லது உள்நாட்டுக்குள் போர், சண்டைகளில் ஏற்படும் உயிரிழப்பு மட்டுமேபெரும்பாலும் கவனிக்கப்படுகிறது.

ஆனால் தங்கம், வைரம், ஆயில், தாதுக்கள், வளமான நிலங்கள், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கவனிப்பதில்லை.

உலகில் 60 ஆண்டுகளில் 40 சதவீத உள்நாட்டு சண்டைகள் இதற்காகவே ஏற்பட்டன.

இந்நிலையில் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 6ல் போர் சூழல்களில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.

காடழிப்பு, எண்ணெய் கிணறுகளை எரித்தல், நச்சு காற்றை வெளியிடுதல், ஈரநிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை அழித்தல் அகியவற்றை தடுப்பது இதன் நோக்கம்.