ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்…

நான் பெரிய பணக்காரன் என்று ஒரு போதும் பெருமை பேசாதே. நட்சத்திரங்களின் பிரகாசத்தின் முன், மின்மினிப்பூச்சியின் கர்வம் காணாமல் போய் விடும்.

இயற்கையின் பேராற்றலின் முன், நம்முடைய செல்வமும் செல்வாக்கும் மிக அற்பமானவை.

நீ இறைவனைத் தேட விரும்பினால், முதலில் மனிதனைத் தேடு. தெய்வீகசக்தி மற்ற எல்லா பொருளைக் காட்டிலும் மனிதனிடமே விசேஷமாக இருக்கிறது.

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, அன்றாடப் பணிகளைத் தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவது போல, சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டத்தை வளர்த்துக் கொள்பவன் இறைவனை அடைவது உறுதி.

உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே மனதைக் கட்டுப்படுத்த பழகியவனே உண்மையில் வீரன்.

மனத்தூய்மை பெற்றவனின் வாய் வார்த்தைகள் மந்திரம் போல காந்தசக்தி பெற்றுவிடும்.

புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.