பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க !
காலையில், 15 நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
உடற்பயிற்சி, யோகா என, இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது, மன அழுத்தத்திற்கு
மிகச்சிறந்த மருந்தாகும்.
எங்காவது செல்ல வேண்டியிருந்தால், அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அன்று
செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும்,
காகிதத்தில் குறித்து வைத்தால், எந்த வேலையையும் மறக்காது; அதனால் ஏற்படும்
மன அழுத்தமும் குறையும்.
பஸ்சுக்காக காத்திருப்பது சிரமம் என கருதாதீர். அச்சமயத்தில், ஒரு புத்தகத்தை படிப்பது, காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல், தேவையற்ற மன அழுத்தத்தையும் குறைக்கும்.
வேலைகளை பிறகு செய்து கொள்ளலாம் என, ஒதுக்கி வைப்பது, மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
ஒரு
இடத்துக்கு செல்ல வேண்டுமென்றால், முன்கூட்டியே செல்ல பழகுங்கள். 10
நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு, 20 நிமிடம் முன்பே செல்லுங்கள்.
தவறாய்
போன ஒரு விஷயம் குறித்து, சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய்
நிகழ்ந்த பலவற்றை குறித்து, அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
மனதில் கவலைகள் இருக்கும்போது, உங்களுக்கு பிடித்தவர்களுடனோ அல்லது பிடித்த விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள்.
மன அழுத்தம் இருக்கும் சமயத்தில், சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்.