எதிர்கால உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் 'பொய்வாழை'!
இது வரை இல்லாத வகையில் உலகளவில், ஆண்டுக்கு சராசரியாக 1.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இது உணவு பஞ்சத்துக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையும் நம்மை அச்சுறுத்துகிறது.
இந்நிலையில், விவசாய ஆராய்ச்சிகள் வாயிலாக 'பொய்வாழை' எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு காய் வகை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 15 மரக் கன்றுகள் நட்டால், ஒரு ஆண்டிற்கு ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து உணவும் இதிலிருந்து கிடைத்து விடுகிறதாக கூறுகின்றனர்.
இது இனிவரும் காலங்களில் உணவு பஞ்சத்திற்கு எதிராக, உணவு மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.
பார்ப்பதற்கு வாழைமரம் போல் இருக்கும் இவற்றின், இலைகள் மட்டும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக வளர்கின்றன.
இதனுடைய தண்டுகளையும் வேர்ப்பகுதியையும் கஞ்சி பிரட் போன்றவை செய்யப் பயன்படுத்துகின்றனர்.
100 மில்லியன் மக்களுக்கு அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் இது, எதிர்காலத்தின் உணவு என்று ஆய்வுகளில் கணிக்கப்படுகின்றது.