குடி பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கும்போது உண்டாகும் பாதிப்புகள்

நீண்ட காலமாக அதிகமாக குடிக்கும் ஒருவர் திடீரென மது பழக்கத்தை நிறுத்தும்போது லேசான அறிகுறிகளாக பதட்டம், துாக்கமின்மை, குமட்டல், வாந்தி, நடுக்கம், வியர்வை காணப்படும்.

மிதமானது முதல் தீவிரமான அறிகுறிகளாக இதய துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு உண்டாகலாம்.

இதுதவிர, மாய எண்ணங்கள் என்று சொல்லப்படும் இல்லாதவற்றை பார்ப்பது, கேட்பது, டெலிரியம் எனப்படும் கடுமையான குழப்பம், வலிப்பு தாக்கங்கள் காணப்படும்.

ஒருவர் குடிக்கும் அளவு அதன் தீவிரத்தை பொறுத்து இந்த அறிகுறிகள் சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை இருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் மனநல டாக்டரை அணுகி அவரது ஆலோசனைபடி சிகிச்சை எடுக்கலாம்.

அப்போது, விரைவில் குணமாகி இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்ப முடியும்.