இன்று உலக வானிலை தினம்
உலக வானிலை அமைப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 1950 மார்ச் 23ல் துவங்கப்பட்டது. இத்தினம் உலக வானிலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
காலநிலை, வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில் உலக வானிலை அமைப்பு ஐ.நா.,வின் துணை அமைப்பாக உள்ளது.
அந்த அமைப்பில் இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
'முன்னெச்சரிக்கை இடைவெளியை ஒன்றுசேர்ந்து தடுத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
ஓர் இடத்தில் நிலவும் வானிலை மற்றோரிடத்தின் வானிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
அதனால் பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களது காலநிலை இடைவேளையைச் சரியாகப் பகிர்தல் அவசியம்.
இயற்கை பேரிடர்களால் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். அழிவுகளை தடுக்கவும், எச்சரிக்கவும் வானிலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நமக்குத் தேவை.