இந்தியாவில் கேமர்களின் எண்ணிக்கை 2026ல் 63 கோடியாக உயரும்: புள்ளிவிவரம் சொல்கிறது.

நிகோ பார்ட்னர்ஸ், இந்தியாவில் மொபைல் மற்றும் கணினிகளின் விளையாடும் கேமர்களின் எண்ணிக்கை 2026க்குள் 62 கோடியாக அதிகரிக்கும் என கணித்துள்ளது.

நிகோ பார்ட்னர்ஸ் என்பது ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கேம் சந்தை குறித்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து வெளியிடும் ஒரு நிறுவனமாகும்.

இந்திய ஸ்டார்ட்அப் உலகம் மந்தமாக இருந்த 2022ல் உள்நாட்டு கேமிங் துறை அதிக முதலீடுகளை ஈர்த்தது.

மொபைல் கேம்களில் பணத்தை செலவழிக்க இந்திய நுகர்வோர் ஆர்வம் காட்டியதால், உள்ளூர் கேமிங் ஸ்டுடியோக்கள் பெரியளவிலான சிக்கலான சிறந்த கேம்களை உருவாக்குவதில் இறங்கியுள்ளனர்.

உலகளாவிய தரத்தில் உள்ளூர் கோணத்துடனான கேம்களுக்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்தியாவில் பிசி மற்றும் மொபைல் கேம்கள் மூலம் 2022ல் ரூ.5,600 கோடி வருவாய் வந்துள்ளது என நிகோ பார்ட்னர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த கணக்கீட்டில் ரம்மி போன்ற உண்மையான பணம் ஜெயிக்கும் விளையாட்டுக்களின் வருவாய் சேர்க்கப்படவில்லை.

இந்திய கேமர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.1 மணி நேரத்தை விளையாட்டுக்கு செலவிடுகின்றனர்.