உங்கள் அலமாரியில் இருக்க வேண்டிய பாரம்பரிய உடைகள்!

பட்டியாலா பேன்ட் வழக்கமான பாட்டமிற்கு மாற்றான அழகான தேர்வாகும். இதில் இரண்டு செட் உங்கள் அலமாரியில் இருப்பது நல்லது.

அனார்கலி உடை நீளமானகாவும் பெரியதாகவும் இருக்கும். மேலும் ஏ-லைன் வெட்டு இடுப்புக்கு மேலே தொடங்கும். காட்டனிலிருந்து மென்பட்டு வரை அனார்கலிகள் உண்டு. எனவே தான் அனார்கலி எப்போதும் பெண்களின் ரேக்குகளில் கணிசமான இடத்தை ஆக்கிரமித்திருக்கும்.

திருமண வரவேற்பில் மணப்பெண் உடையாகவே லெஹங்கா மாறிவிட்டது. குறைந்த வேலைப்பாடு கொண்ட லெஹங்காவை வீட்டு விஷேங்களுக்கு தேர்வு செய்வது அசத்தலான லுக்கை வழங்கும்.

நீங்கள் ஸ்டைலாக தோற்றமளிக்க பலாஸ்ஸோ பேன்ட்களுடன் கூடிய குர்தா அல்லது ஷெர்வானியை அணியலாம். குட்டையான டாப் அல்லது டி-ஷர்ட்டுடன் பலாஸ்ஸோ பேன்ட்களை மேட்ச் செய்து ஜங்கி நெக்லஸ் போன்றவற்றை அணியலாம்.

டேங்க் டாப்ஸ் மற்றும் ஜங்கி நகைகளுடன் லாங் ஸ்கர்ட்களை அணிந்தால் டிரெண்டியாகவும், பாரம்பரியமாகவும் டூயல் தோற்றத்தை தரும். நீளமான அல்லது குட்டையான குர்தாக்களுடன் அணிந்தாலும் பேஷனபிலாக இருக்கும்.