டூ-வீலர் மற்றும் காரில் பயணம் செய்யும் போது...
சுற்றுலா செல்வதற்கு பயணிக்கும் பாதையை தீர்மானித்து விடுவது நல்லது.
போகும் வழியில் பார்க்க வேண்டிய இடங்கள், முக்கிய உணவகங்களையும், 'இன்டர்நெட்'டில் பார்த்து செல்வது நல்லது.
தங்கும் இடத்தையும் முன்கூட்டியே பதிவு செய்து விடுங்கள்
டோல்கேட் ரசீதுகளை பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
வேறு மாநில பதிவு வாகனங்கள் என்றால், அதிகாரிகள் நிறுத்தி சோதனையிடவோ, விசாரணை செய்யவோ வாய்ப்புள்ளது
செல்லும் இடங்களையும், பயணிக்கும் பகுதிகளின் காலநிலையையும், 'செக்' செய்ய வேண்டும்.
மூடப்பட்ட சாலைகள், இயற்கை சீற்றங்கள், வாகனம் பழுது என, ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை சமாளிக்க மாற்றுப் பயணத் திட்டத்தையும் வைத்துக் கொள்வது அவசியம்.