முதல் முறை விமானத்தில் பறக்க போகிறீர்களா? உங்களுக்கான வழிகாட்டல் இதோ
ரயில் டிக்கெட் எடுப்பது போன்று விமான நிலையத்திலும், அங்குள்ள கவுன்டர்கள் மூலம் நேரடியாக டிக்கெட் வாங்கலாம். எதில் டிக்கெட் மலிவாக உள்ளது என விசாரிக்கலாம்.
ஏஜென்ட் நிறுவனங்களின் இணையதளங்கள் உள்ளன. அதில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே டிக்கெட் எடுக்கலாம்.
டிக்கெட் எடுக்கும் போது வோட்டர் ஐடி, ஆதார் என அடையாள அட்டையில் என்ன பெயர் உள்ளதோ அதையே தர வேண்டும். பெயர் வித்தியாசம் இருந்தால் பயணிப்பதில் சிக்கல் ஏற்படும்.
நமது பைகளில் பேட்டரிகள், கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான டூல்கள், எண்ணெய் சேர்ந்த உணவுப் பொருட்கள், ட்ரோன் கேமரா போன்ற பல பொருட்கள் அனுமதிக்கபடுவதில்லை.
ரயில் நிலையத்தில் எப்படி பிளாட்பார்மோ அதேப்போல், விமான நிலையத்தில் டெர்மினல்கள் உண்டு. உங்கள் டிக்கெட்டில் விமானத்திற்கான டெர்மினல் குறிப்பிட்டிருக்கும்.
டெர்மினல்களின் தூரத்தில் வித்தியாசம் இருப்பதால், உள்நாட்டு விமானப் பயணம் என்றால் 2 மணி நேரம் முன்பாகவும், சர்வதேச விமானப் பயணத்துக்கு 3 மணி நேரம் முன்பாகவும் செல்வது அவசியம்.
டெர்மினலுக்குள் சென்றதும் டிக்கெட் மற்றும் ஐடி கார்டை செக்யூரிட்டி அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். தொடர்ந்து, உள்ளே அனுமதிப்பர்.
பின்னர் போர்டிங் பாஸ் பெற வேண்டும். இது இல்லாவிட்டால் விமானத்திற்குள் அனுமதிக்க மாட்டார். போர்டிங் பாஸில் கேட் நம்பர், சீட் நம்பர், போர்டிங் நேரம், பெயர் உட்பட பல தகவல்கள் இருக்கும்.
தற்போது வெப் செக்கின் செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. முன்னதாகவே, பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டால் க்யூவில் நின்று போர்டிங் பாஸ் வாங்க வேண்டியதில்லை.