நல்ல காளான்கள் என அடையாளம் காண்பது எப்படி?
காளான்கள் இன்று அதிகமாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
ஒருநாள் முன்னதாக அறுவடை செய்யப்பட்ட, காளான் தான் தற்போது விற்பனைக்கு வருகிறது.
காற்று புகாத அளவுக்கு நன்றாக, 'பேக்' செய்யப்பட்ட காளான்களை வாங்கி பயன்படுத்தலாம். தேதி மற்றும் நிறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவை, உண்ணக்கூடிய காளான் தானா என்பதை, ஒருமுறை உறுதி செய்துகொள்ள வேண்டும். மிகவும் பழுப்பாக இருந்தால் வாங்க வேண்டாம்.
வெந்நீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்த பின், காளான்களை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கழுவும் போது சிறிது மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காளான்களை அன்றைய தினமே பயன்படுத்தி விடுவது மிகவும் நல்லது. நாள் தவறினால் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.