குடும்ப டாக்டரை தேர்வு செய்யும் முறை!
குடும்ப டாக்டர் என்பவர், தன்னிடம் வரும் நோயாளியின் குடும்பம், அவர்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் என்று அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு தெரியும்.
பொதுவாக அவரிடம் ஒருங்கிணைந்த அணுகுமுறை இருக்குமே தவிர, நோய் சார்ந்து பார்க்க மாட்டார்.
ஏற்கனவே நம் உடல் நலம் பற்றி தெரிந்து இருப்பதால், சுலபமாக மருந்துகளை சிபாரிசு செய்ய முடியும். இந்த வசதி வேறு எதிலும் வராது.
ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்து கார்ப்பரேட் மருத்துவமனைக்கு சென்றால், எல்லா டெஸ்டையும் முடித்துவிடலாம் என்ற மனநிலை தான் உள்ளது.
ஒவ்வொருவரும் குடும்ப டாக்டர் என்ற ஒருவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்தால் நல்லது.
அப்படி இல்லாத பட்சத்தில் எங்கு முடியுமோ அங்கு தேர்வு செய்யலாம்.
குடும்ப டாக்டரை நேரில் பார்க்க முடியா விட்டாலும், எந்த ஊரில் இருந்தாலும், அலைபேசியில் அழைத்து, பிரச்னையை சொல்லலாம்.
சிறப்பு மருத்துவர் தேவைப்படும் போது, அவரின் சிபாரிசுடன் செல்வது இன்னும் வசதியாக இருக்கும்; இரண்டாவது அபிப்ராயமும் பெறலாம்.