ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1948ல், ஐக்கிய நாடுகள் சபையால், உலக சுகாதார அமைப்பு துவக்கப்பட்டது.
1950ல், புதுப்புது கருத்துக்களை மையமாக வைத்து, உலக சுகாதார நாளாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் நிலவும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.
கூடவே மக்களை ஆரோக்கிய வாழ்வு வாழ ஊக்குவிக்கிறது. மேலும் மன ஆரோக்கியம், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலன், பருவநிலை மாற்றம் ஆகியவை கடந்த காலங்களில் கவனம் பெற்ற பிரச்னைகள் ஆகும்.
இந்தாண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள், 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' என கொண்டுள்ளது.
குறிப்பாக அனைவருக்கும் தேவையான சுகாதார வசதிகள் கிடைப்பது, அவர்களுக்கு இருக்கும் சலுகை கிடையாது உரிமை என்பதை இந்த நாள் முன்னிறுத்துகிறது.
பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான வீடு, நல்ல வேலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாகுபாட்டில் இருந்து சுதந்திரம் கிடைக்கவேண்டும் அகியவற்றையும் வலியுறுத்துகிறது.