உங்கள் வீட்டினை ஒப்பனை செய்ய ஏற்ற ஒரு அரிய மலர்
அரியவகை மலர்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் உடையவரா நீங்கள், அவற்றில் ஒன்றே 'மிட்டல் மிஸ்ட் ரெட்' எனப்படும் கமேலியா குடும்பத்தைச் சார்ந்த ஒருவகை பூவாகும்.
200 வருடங்களுக்கும் மேலாக சீனாவைப் புகலிடமாகக் கொண்ட இந்த மலரானது, தற்போது உலகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
மிட்டல் மிஸ்ட் ரெட்' என்று அழைக்கப்பட்டாலும், அதனது பெயருக்கு எதிர் மாறாக கரும் ரோஜா நிறத்தில், ரோஜா பூவின் வடிவத்தை ஒத்து இருக்கும்.
இது அழகில் சிறந்து விளங்குவதோடு, மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய மலராகும். புற்றுநோய், இதயப் பிரச்சனை, போன்றவற்றிற்கெல்லாம். பயன்படும் அருமருந்தாக இருக்கின்றது.
'குளிர்காலத்தின் ரோஜா' என அழைக்கப்படும் இந்த மலரினது, பூக்கும் காலம் நவம்பரிலிருந்து துவங்கி, பிப்ரவரி வரை நீடிக்கும்.
இதன் விதையானது, பல்வேறு இணையதளப் பக்கங்களில் விற்கப்படுகின்றன.அதனை வாங்கி நாம் வீட்டிலேயே விதையிட்டு வளர்க்கலாம்.
இந்த பூச்செடியானது அமிலத்தன்மை உள்ள நிலத்தில் நன்கு வளரக்கூடியது.