இன்று உலக கடல்சார் தினம்!
உலக கடல்சார் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
80 சதவீத சர்வதேச வணிகம் கடல் வழியாகவே நடக்கிறது. கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம், கப்பல் போக்குவரத்து, கடல் வர்த்தகம், சுற்றுச்சூழல் போன்ற தொழில் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்ற தொழில்களைப் போலவே, கடல்சார் தொழில்துறையும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
மேலும் சுமூகமான கடல் சேவைகளின் உதவியுடன், இன்று கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்புகளும் உலகில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பும் வசதி ஏற்பட்டுள்ளது.
'நமது பெருங்கடல், நமது கடமை, நமது வாய்ப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.