இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
உலக மக்கள் தொகையில் 1.3 மில்லியன் பேரில் 16 சதவீதம் பேர் ஒரு வகையான மாற்றுத்திறனுடன் வாழ்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் இயக்க தடையுடன் அல்லது தினசரி செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக நரம்பியல் குறைபாடுகள், தசை பலவீனம், மூட்டு பிரச்னை உள்ளவர்கள் கீழே விழுவதற்கான அபாயம் அதிகம்.
இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர்.
அவர்களது உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.,3ல், 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
மேலும் அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்.