கல்வியில் சிறக்க வகுப்பறையில் கவனம் அவசியம்!
பெரும்பாலான மாணவர்களுக்கு பிரச்னை வகுப்பறையில் கவனமாக இருப்பதுதான். நண்பர்களுடன் பேசுவது, வெளியே வேடிக்கை பார்ப்பது, தூக்கம் என பல்வேறு வகையில் கவனம் சிதறி விடும்.
கவனம் குறைவாக உள்ள மாணவர்கள் முடிந்த வரை முதல் இரண்டு வரிசைகளிலுள்ள பெஞ்சுகளில் அமர முயற்சிக்கலாம். அவ்வாறு அமரும்போது ஆசிரியர் நடத்துவது தெளிவாக கேட்கும்.
முன்வரிசையில் அமரும்போது ஆசிரியர்களுடன் ஐ காண்டாக்ட் மேம்படும். ஆசிரியர்களும் மாணவர்கள் கவனிக்கும் பொழுதுதான் பாடம் தொடர்பான அதிக தகவல்களை பகிர்வார்கள்.
பாடம் குறித்த சந்தேகம் கேட்பது மிகவும் முக்கியம். அவ்வப்போது கேட்கப்படும் சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
மறுநாள் நடத்தப்போகும் பாடத்தை முந்தைய தினமே ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்வது மறுநாள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும்போது எளிதாக புரிந்து கொள்ள உதவும்.
ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது அந்த தலைப்பு குறித்த முக்கிய குறிப்புகளை மாணவர்கள் கவனமாக குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வகுப்பில் எடுத்த குறிப்புகளை வைத்து அன்றைய பாடங்களை அன்றே வீட்டில் படிக்க வேண்டும். இதனால் தேர்வு சமயத்தில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.