கலப்பட டீத்துாளை கண்டுபிடிக்க இதோ ஈஸி டிரிக்ஸ்
கண்ணாடி டம்ளரில் குடிநீரை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் அளவு டீ துாளை சேர்க்கவேண்டும்.
கலப்படம் இல்லாத நல்ல டீ துாளாக இருந்தால், நீரில் எவ்விதமான நிற மாற்றமும் ஏற்படாது.
செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட டீ துாளாக இருந்தால், தண்ணீர், ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறி விடும்.
டிஷ்யூ பேப்பரின் மீது (உறிஞ்சு தாள் ) டீ துாளை வைத்து, அதன்மீது சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தாளின் நிறம் மாறவில்லையெனில், நல்ல டீ துாள்; ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமாக மாறினால், செயற்கை நிறமி சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யலாம்.
கண்ணாடி தட்டில் சிறிதளவு தேயிலைகளை எடுத்து, காந்த துண்டை வைத்து நகர்த்தவேண்டும். கலப்பட தேயிலை எனில், காந்தத்தில் இரும்பு துகள் இருக்கும்.