வீடுகளை வாடகைக்கு விட முறையாக பதிவு செய்வது எப்படி? செலவு எவ்வளவு?

தமிழக அரசின் 'வாடகைதாரர், உரிமையாளர் உரிமை மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017'ன் படி, வாடகை ஒப்பந்தங்களை 'ரென்ட் அத்தாரிட்டி'யில் பதிவு செய்வது கட்டாயம்.

முன்பு, 11 மாதத்துக்கு மேல் வாடகைக்கு விட்டிருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

இப்போது, வாடகை விடும் காலம் 1 மாதமாக இருந்தாலும் சரி, 11 மாதமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யவில்லை எனில், இந்த ஒப்பந்தத்துக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது. நாளை வாடகைதாரர் காலி செய்ய மறுத்தாலோ, வாடகை தராவிட்டாலோ, நீதிமன்றத்தை நாட முடியாது.

அரசு www.tenancy.tn.gov.in என்ற வலைத்தளத்தில், உரிமையாளரும் வாடகைதாரரும் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

வாடகை தொகை, அட்வான்ஸ், காலம் உள்ளிட்ட ஒப்பந்த விபரங்களை உள்ளிட வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் எழுதி கையெழுத்திட்ட வாடகை ஒப்பந்தம், இருவரின் ஆதார் அட்டை, வீட்டின் சொத்து வரி ரசீது ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

கட்டணம் செலுத்திய பின், உங்களுக்கு டெனன்சி பதிவு எண் வழங்கப்படும். இதுதான் உங்கள் பாதுகாப்பு கவசம்.

இதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக மொத்த வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையில் 1 சதவீதம் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை கட்ட வேண்டும்.

வாடகை ஆணைய வலைதளத்தில் பதிவு செய்ய, ஒரு விண்ணப்பத்துக்கு தோராயமாக ரூ. 100 முதல் 200 வரை மட்டுமே ஆகும்.

முன்புபோல் வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது இப்போது செல்லாது.

முறையாக 1 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி கட்டி, அதை அரசு வலைதளத்தில் 100 ரூபாய் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே, உங்கள் சொத்து பாதுகாப்பாக இருக்கும்.