இன்று போகிப்பண்டிகை கொண்டாட்டம்!

மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது வழக்கம்.

பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விழா இது. “இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி வழங்குகிறது.

இதுநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

வீட்டில் பழைய பொருட்களை நீக்கி அழிப்பது போல் நம் மனதிலும் தீய எண்ணங்களை அழிக்க வேண்டும் என்பது இப்பண்டிகையின் முக்கிய தத்துவமாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது.

அதேபோல் ஆரோக்கியம் தொடர்பாக போகிப்பண்டிகை அன்று ஒவ்வொரு வீ்ட்டின் நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள்.

ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி வீட்டினுள் தீய சக்தி நுழையாதவாறு நிலைக்கதவுக்கு மேல் காப்பு கட்டுவார்கள்.